#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாதக ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவர்களை நிரந்தரமாக வெளியேற்றி விடுவேன் - சீமான் சர்ச்சை பேச்சு!
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றி விடுவேன் என்று அத்தாட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத்தவர்களால் தான் குற்றங்கள் அதிகரிக்கிறது என பேசியுள்ளார்.
மேலும், கோவையில் வானதி சீனிவாசன் ஜெயித்ததற்கு காரணம் வட மாநிலத்தவர்கள் பதிவு செய்த வாக்குகள் தான் என கூறியுள்ளார். நான் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றி விடுவேன் என்றும் வட மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடும்ப அட்டையையும் திரும்ப வெற்றி பெறுவேன் என பேசியுள்ளார்.
இந்த நடவடிக்கையை தமிழகத்தில் எடுக்காவிட்டால் தமிழகம் சீக்கிரமே ஹிந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.