திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!!
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகின்ற 18ஆம் தேதி அன்று தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
நடக்கவிருக்கும் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 9 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் வழங்க வலியுறுத்தி கடிதம் எழுதியதாக தகவல்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகளுக்கான ஆதார விலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.