"பிரதமர் வேற்றுமை பார்ப்பதில்லை" தமிழிசை கொடுத்த விளக்கம்.! 



Tamilisai speech about Pm hate speech Of muslim

பிரதமர் மோடி ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் கடந்த ஞாயிறு அன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "இந்திய மக்கள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கம் உள்ளிட்ட அனைத்தையும் பறித்து நாட்டிற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்கள் போன்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். அவர்களின் தேர்தல் அறிக்கையில் குடிமக்களின் சொத்துக்கள் அனைத்தும் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது தான் அதற்கு சாட்சி. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இஸ்லாமிய மக்களுக்கு தான் நாட்டின் சொத்துக்களில் முதல் உரிமை என்று தெரிவித்து இருந்தார்.

pm modi

மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறித்து அதை கணக்கிட்டு இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் காரர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பது உங்களுக்கு இதன் மூலம் தெரிந்து இருக்கும். நாம் சம்பாதித்த சொத்துக்கள் அந்த ஊடுருவியவர்களுக்கு செல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? நாட்டில் இருக்கும் பெண்களின் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அவற்றை பறித்து அவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். தங்கம் பெண்களின் சுயமரியாதை. அவர்களது கனவு. பெண்களின் தாலியை பறிக்கக் கூடிய உரிமை யாருக்கும் கிடையாது." என்று பேசி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

pm modi

இது பற்றி பலரும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோடியின் மீது வெறுப்பு பேச்சு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக வேட்பாளரும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "காங்கிரஸ் முன்னெடுத்துள்ள தவறான பிரச்சாரத்தின் வெளிப்பாடுதான் இது. பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தவறானது. அவர் இந்திய மக்களிடையே வேற்றுமையை பார்ப்பதில்லை. பிரதமர் வழங்கும் திட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் அனைத்து தரப்புக்குமானது. அவர் யாரையும் பிரித்துப் பார்ப்பது இல்லை." என்று கூறியுள்ளார்.