மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் நிகழும் அசாதாரண அரசியல் சூழல்; அடுத்தடுத்து நிகழும் திடீர் திருப்பங்கள்!
தமிழக முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்ட மேல்முறையீடு. 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பாக ஓரிரு நாட்களில் வெளிவர இருக்கும் பரபரப்பு தீர்ப்பு. அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் பதிவு வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவது என அடுத்தடுத்து நிகழும் திடீர் திருப்பங்களால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு அதிகமான நிதிகள் (4800 கோடி) ஒதுக்கி தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் உயர்நீதிமன்றமானது சிபிஐ விசாரணைக்கு அதிரடியாக உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தனபாலுவால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில்
நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய நீதி அமர்வு செல்லாது என்றும் மாறுபட்ட பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில் மூன்றாவதாக நீதிபதி சத்ய நாராயணா அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளிவர உள்ளது இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்சமயம் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் தீர்ப்பானது டிடிவி தினகரன் தரப்பினருக்கு ஆதரவாக வந்தால் தமிழக அரசியலில் பல புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்களால் கருத்து தெரிவித்து வருகிறது வருகிறார்கள்.
மேலும், அமைச்சர் ஜெயக்குமார் மீது பிறப்பு சான்றிதழ் தொடர்பாக குரல் பதிவு ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இந்நிலையில் அந்தக் குரல் தன்னுடையது அல்ல மார்பிங் செய்துள்ளனர் என்றும் இத்தகைய செயல்களை தினகரன் ஆதரவாளர்கள் தான் செய்து வருகின்றனர் என்றும் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்க முடியாத திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்றும் இதனால் தற்சமயம் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் சாமானிய மக்கள் பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.