#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாம்பு, ஆடு, சிங்கம் என விலங்குகளை வைத்து சீறிக் கொண்டிருக்கும் தமிழிசை, திருமாவளவன்.
ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தை விட பலமானதா என்று திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்சமயம் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். எனினும் அவர் தெரிவிக்கும் கருத்துகள் பெரும்பாலும் விவாதத்துக்கு உரியதாக மாறிவிடுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் குறித்து கேள்வி கேட்டபோது யார்? அந்த ஏழு பேர் எனக்கு தெரியாது என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இது மிகவும் சர்ச்சைக்குள்ளானது மேலும், ஒருவரை பத்து பேர் சேர்ந்து எதிர்த்தால் யார் பலசாலி? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே இவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும் விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம் என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
திருமாவளவனின் இந்த பதிலுக்கு தமிழிசை உரிய பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.