மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'பாஜக'-வில் இணைகிறாரா சூப்பர் ஸ்டார்.?! மாநிலங்களவை எம்.பி சீட் உறுதி.?!
சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதும் அரசியல் கட்சிகளில் இணைவதும் காலம் காலமாக நடந்து வருகிறது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவருக்கென்று தெலுங்கு சினிமாவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சினிமாவில் கொடி கட்டி பறந்த சிரஞ்சீவி கடந்த 2008 ஆம் ஆண்டு ப்ரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சிக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார்.
அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் வர இருக்கின்ற நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தங்கள் கட்சியில் இணைக்க பாஜக திட்டம் தீட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.