திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு இவர் தான்.! அதிமுக எம்எல்ஏ-வை பங்கமாக கலாய்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு.!
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் எந்த பொழுது போக்கு வசதியும் இல்லை. மதுரையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால் பொழுதுபோக்க இடமே இல்லை என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய கலைப் பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜு என்பது நாட்டிற்கே தெரிந்த விஷியம் என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்தப் பேச்சால் திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரை ஒரு சுற்றுலா நகரமாக இருந்தாலும் அங்கு பொழுதுபோக்கு இடங்கள் என எதுவும் இல்லை. கீழடி அகழாய்வு நிலையம், சமணர் குகைகள், கோயில்களை பார்வையிட நாள்தோறும் பேருந்ந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் சுற்றுலா வளர்ச்சி பெறும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அமைச்சர் சொல்லும் நல்ல நல்ல யோசனைகள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.