ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழ்நாடு ஆளுநர் பதிலுக்கு எதிர் கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர்..!



 The Union Minister expressed his opposition to the Tamil Nadu Governor's reply

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி பார்த்தீபன், ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், 7ம் அட்டவணையில் இருக்கும் 34வது பிரிவில் ஆன்லைன் விளையாட்டு சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அனுமதி உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

tamilnadu political

ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்று கூறி, அதனை நிராகரித்து ஏற்றுக்கொள்ள மறுத்தார். 

தற்போது மத்திய அமைச்சர் தெரிவித்தது ஆளுநர் கூறிய தகவலுக்கு எதிரானது என்பதால், அரசியல் ரீதியான மோதல் முற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.