திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தம்பி அண்ணாமலைக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" - செல்லூர் ராஜுவின் நூதன கோரிக்கை.!
2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஒன்றாக பயணித்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை எதிரணியில் இருந்து தேர்தலை சந்திக்கிறது. இரண்டு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை கூறிய கருத்திற்கு சைலண்டாக பதிலடி கொடுத்திருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். நான் குளங்களின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வைத்து மூடியதால் என்னை தெர்மாகோல் ராஜு என்று எல்லோரும் கேலி செய்து ட்ரெண்டிங் செய்தனர்.
தற்போது நான் பேசினால் மழை வரும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். நான் பேசும் இடம் எல்லாம் மழை பெய்கிறதா.? அவரை ஏன் ட்ரெண்டிங் செய்யவில்லை கிண்டல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் தம்பி அண்ணாமலைக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தற்போது தேர்தலுக்காக கச்ச தீவு பிரச்சனை பற்றி பேசி வருகிறது எனவும் தெரிவித்தார்.