மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் இருக்காது - திருமாவளவன்!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் பாஜக குறித்து கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். அதன்படி இன்று சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேஷன் கடைகள் இருக்காது, 100 நாள் வேலை திட்டம் இருக்காது, சமூக நீதி இருக்காது, அதிபர் ஆட்சியை வந்துவிடும் என கூறியுள்ளார். மேலும், வங்கியில் கடன் வாங்கினால் வீட்டுக்கே வந்து வங்கி நிர்வாகம் வசூலிக்கும் நிலை ஏற்படும்.
மோடியின் ஆட்சியில் அவரது நண்பர்களான அம்பானி, அதானி மற்றும் மல்லையா வங்கிகளில் எவ்வளவு கோடி கடன் வாங்கினாலும் தள்ளுபடி செய்வார்கள். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது. வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு நசுக்குகிறது. எனவே, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.