53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#Breaking : எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு சங்கம் ஆதரவு.. விறுவிறுப்பாகும் தேர்தல் களம்.!
தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் பரபரப்பாக தேர்தல் வேளையில் ஈடுபட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக, திமுக மற்றும் நாதக என்று 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் வழக்கம் போல ஒரே கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்க வேண்டும் என்று உத்தரவு போட்டதால் அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத நேரத்தில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
பாஜக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமக, சமக, தாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன. இதனால் இந்த தேர்தலில் கடந்த தேர்தல்களை விட அதிமுகவின் வாக்கு வங்கியானது மிகப்பெரிய அளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக தாமாக முன்வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கையானது தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாக தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த விவசாய சங்க நிர்வாகிகள் அவரிடம் ஆதரவு கடிதத்தை ஒப்படைத்தனர். இவர்களது ஆதரவானது அதிமுகவிற்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.