#Breaking: வஞ்சகத்துக்கு நன்றி! ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல - ஆளுநர் ஆர்.என் ரவி எச்சரிக்கை.!



  TN Governor RN Ravi on MK Stalin 12 Jan 2025 

முக ஸ்டாலினின் வெட்கக்கேடான, அவமானத்தை பாரதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விரும்பமாட்டார்கள் என ஆர்.என் ரவி குறிப்பிட்டுள்ளார்.

2025 ம் ஆண்டின் தமிழ்நாடு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு உரை ஆற்றச் சென்ற ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவுபெற்றவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவையை விட்டு வெளியேறினார். மேலும், இதுதொடர்பாக தனது கண்டன அறிக்கையை வெளியிட்ட ஆளுநர், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தை அவமதிக்கிறது என கூறினார். இந்த விசயத்திற்கு அரசுத்தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டபோது, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசியகீதம் இசைப்பதே மரபு என கூறப்பட்டது.

வஞ்சகம் செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

இந்நிலையில், ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. 

இதையும் படிங்க: பெரியாருக்கு எதிராக புலம்பும் சீமானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; பரிதாபமா இருக்கு.! சத்யராஜ் கலாய்.!!

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: சீமானுக்கு ஆதரவு: "நான் தரேன் ஆதாரம்" அண்ணாமலை பாய்ச்சல்.!