கோவில்பட்டி தொகுதியை டிடிவி தினகரன் ஏன் தேர்ந்தெடுத்துள்ளார் தெரியுமா.? டிடிவி போட்ட மாஸ் ஸ்கெட்ச்!



TTV dhinakaran in kovilpatti thoguthi

கோவில்பட்டி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை என்று செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். தற்போது கோவில்பட்டியில், MLA-வாக உள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு வுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 400 வாக்குகளில்தான் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். இந்த நிலையில்தான் கோவில்பட்டி தொகுதியை தினகரன் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில், கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. மேலும், இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கதிரவன் களம் இறங்கி உள்ளார்.

இதனால் இந்த தொகுதியில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி வாகை சூடப்போவது யார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்பார்ப்பை எப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக கோவில்பட்டியில் போட்டியிடும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவில்பட்டி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை. பல்வேறு நேரங்களில் பல்வேறு நேரங்களில் பல்வேறு பிரச்னைகளை தாண்டி அதிமுக வெற்றிபெற்றுள்ளது. 2011ல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது தன்னை பொதுமக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர் என தெரிவித்துள்ளார்.