ஸ்டாலினுக்கு எதிராக போராடிய 20 வழக்கறிஞர்கள் கைது.! நீதிமன்றத்தில் சர்ச்சை.!



twenty-lawyers-arrested-for-protest-against-stalin

ஸ்டாலின் விமர்சனம் :

தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவரான ராமதாஸ் குறித்து தரம் குறைவாக விமர்சித்து இருந்தார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் தரப்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அது மட்டுமல்லாமல் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்க துவங்கியுள்ளது.

cheif minister

தீவிர போரட்டம் :

வெகு சாதாரணமாக முதல்வர் ஸ்டாலின் பேசிய இந்த பேச்சு இந்த அளவிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் திமுக மற்றும் ஸ்டாலினை விமர்சித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், ராமதாஸ் குறித்து அவதூறாக பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமகவினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வளாகத்திற்கு முன்பாக போராட்டம் நடந்தேறியது.

cheif minister

வழக்கறிஞர்கள் போராட்டம் :

சமூக நீதிப் பேரவையின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராகவும், ஸ்டாலினுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, பெரம்பலூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.