மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்சியே போனாலும் கவலை இல்லை! உதயநிதி ஸ்டாலின் அடாவடி!!
அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதில், சனாதனத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார். அதாவது, சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்றும், டெங்கு, மலேரியா, கொரோன போன்றவற்றை எதிர்க்க முடியாது ஒழிக்க வேண்டம் அது போல தான் சனாதனமும் என்று அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் இது குறித்து கேட்கும் போதெல்லாம் அவர் சொன்ன கருத்தில் உறுதியாக நின்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மீண்டும் இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அம்பேத்கர் பேசாததை, பெரியார் பேசாததை, அண்ணா பேசாததை ஒன்றும் நான் பேசிடவில்லை. சனாதனத்தை ஒழிக்கவே திமுக தொடங்கப்பட்டது. சனாதன எதிர்ப்புக்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை, என்று அவர் கூறியுள்ளார்.