திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோட் பட தலைப்பில் சனாதனம்? அதிர்ச்சியை தந்த விசிக எம்.பி.. பரபரப்பு விளக்கம்.!
நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of All Time GOAT). இப்படம் செப்டம்பர் 05ம் தேதியான இன்று உலகளவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில் படம் உருவாகி வெளியாகியுள்ளது. தயாரிப்பு பணிகளை ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நேற்று இரவு முதலாக திரையரங்கில் திரண்ட ரசிகர்கள், ஆட்டம் பட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல் காட்சிகள், சிறப்புக்காட்சிகளை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விசிக எம்பி கேள்வி
இந்நிலையில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக எம்.பி ரவிக்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.. (தொல்.சொல். 157)" என தெரிவித்துள்ளார்.
விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
— Dr D.Ravikumar (@WriterRavikumar) September 5, 2024
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய்… pic.twitter.com/hJceOJVjYM