திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... பாமக - பாஜக கூட்டணியை கட்டம் கட்டும் அதிமுக.!! EPS பிறப்பித்த அதிரடி உத்தரவு.!!
நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்தவர்கள் பாமக மற்றும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
அதிமுக புறக்கணிப்பு
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி, பாஜக மற்றும் பாமக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. வர இருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் மூலம் தெரிவித்தார். ஆளும் கட்சி திமுக தனது அதிகார பலத்தை பயன்படுத்தி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தல்களில் மக்கள் கருத்து மதிக்கப்படவில்லை எனக் கூறி அதிமுக புறக்கணிப்பு செய்வதாக அவர் அறிவித்தார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக்கழகம்? - புஸ்லி ஆனந்தின் அனல் பறக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கிளைச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு
அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் அதிமுகவின் வாக்குகள் பாமகவிற்கு கிடைத்து பாமக - பாஜக கூட்டணிக்கு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அதிமுக மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் நிலவியது. இந்நிலையில் அதிமுகவின் வாக்குகள் பாமக மற்றும் பாஜக கூட்டணிக்கு செல்லக்கூடாது என மாவட்ட கிளைச் செயலாளர்களை போனில் அழைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பெற்று பாமக பலமான கட்சியாக உருவெடுக்கக் கூடாது என்பதில் இபிஎஸ் கவனமாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்புமணி ராமதாஸ் அதிமுகவின் வாக்குகள் பாமகவிற்கு செலுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்த நிலையில் அதிமுக கட்சியினர் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் ஆனால் பாமக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பரபரப்பு... ஆளுநரை சந்தித்த இபிஎஸ்.!! முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்.!!