மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துவங்கியது வாக்கு எண்ணிக்கை!. இந்த முடிவுகளே அடுத்து நாட்டை யார் ஆள்வது என நிர்ணையிக்குமா?
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த முடிவுகளின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையடுத்து அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் 21 மாநிலங்களில் ஆளும் கட்சியாக திகழும் பாஜக,வுக்கு தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால் இன்னும் ஆதிக்க கட்சியாக பாஜக வலுப்பெறும்.
இந்த தேர்தல் முடிவுகளில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போவது என்பது தெரிந்துவிடும் என பொதுமக்கள் ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து வருகின்றனர். இன்று மாலைக்கு 5 மணிக்குள் முழுவிபரம் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.