மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த தேர்தலில் எங்களது சாதனைகளை நாங்களே முறியடிக்க உறுதி பூண்டுள்ளோம்: அமித்ஷா அதிரடி..!
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி சனந்த் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சனந்த் சட்டமன்ற தொகுதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காந்திநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கியது. இதன் காரணமாக கனுபாய் படேல் மனுதாக்கல் செய்யும் போது, அவருடன் அமித்ஷாவும் கலந்து கொண்டார்.
மனுதாக்கல் முடிந்த பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமித்ஷா கூறியதாவது, "குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி இதற்கு முந்தைய தேர்தல்களில் படைத்த சாதனைகளை இந்த தேர்தலில் முறியடிக்கும். குஜராத்தை பொறுத்தவரை மிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மிக அதிகளவில் தொகுதிகளை கைப்பற்றி சாதனை புரிவோம். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்" என்று கூறியுள்ளார்.