#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்.. சர்ச்சையாகும் புகைப்படம்!
18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வேட்பாளர்கள் பொது மக்களை கவரும் வகையில் வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்படி டீக்கடையில் டீ போடுவது, வடை சுடுவது, தோசை சுடுவது, விவசாயம் செய்வது போன்ற பல நகைச்சுவை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககன் முர்மு என்பவர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு திடீரென முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.