பட்டியல் போட்டு பட்டையை கிளப்பும் கதிர் ஆனந்த்!! நீண்டுகொண்டே செல்லும் நலத்திட்ட பட்டியல் இதோ...
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி தொகுதியில் தான் செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டுள்ளார் அந்த தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.
தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளநிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதி மக்களின் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள், இந்தமுறையும் அதே தொகுதியில் போட்டியிடும்நிலையில், கடந்தமுறை தனது தொகுதி மக்களுக்கு என்னெல்லாம் நலத்திட்டங்களை செய்துகொடுத்தேன் என பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜின்னா ரோடு பேருந்து நிலையத்தில் 11 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, பெருமாள் பேட் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் 11 லட்சம் மதிப்பில்பயணிகள் நிழற்குடை, 15 லட்சம் மதிப்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம், 13 லட்சம் மதிப்பில் நியூ டவுன் பகுதியில் நியாயவிலை கட்டிடம், 30 லட்சம் மதிப்பில் இந்து உயர்நிலை பள்ளியில் கழிப்பறை கட்டிடம், உதயேந்திரம் - சி.வி. பட்டரை பேருந்து நிலையம், உதயேந்திரம் - மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அதுமட்டும் இல்லாமல், சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை, கே.வி குப்பம் சுங்கச்சாவடி அகற்றல், மேம்பாலம் அமைய குரல் கொடுத்தது, இளைஞர்கள், இளம் பெண்கள் விளையாட்டு போட்டிகளுக்கு உதவி செய்தது என கடந்த முறை ஆட்சியில் கதிர் ஆனந்த் செய்ய நலத்திட்டங்கள் நீண்டுகொண்டே செல்கிறது.
இதனால் வேலூர் தொகுதி மக்களிடையே கதிர் ஆனந்திற்கு பெரிய வரவேற்பு இருப்பதால் இந்தமுறையும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் மகுடம் சூடாவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நமது வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி வாழ் மக்களுக்கு திராவிட மாடல் நாயகர் மக்கள் முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஒருங்கிணைந்த எங்களது உழைப்பால் நடைபெற்ற நலத்திட்டங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு!
— KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் (@dmkathiranand) April 16, 2024
சொன்னதை செய்வோம்! மக்கள் மன்றத்தில் உரிமையோடு… pic.twitter.com/KWkknnbiNI