திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்.! யார் இவர்.!?
தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக சார்பில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்களை அறிவித்துள்ளனர். இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம் எல்ஏ நயினார் நாகேந்திரன், வினோஜ் பி. செல்வம் போன்றவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறனை எதிர்த்து பாஜக சார்பில் வினோஜ் பி செல்வம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
பாஜக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம் யார் இவர்?
பாரதிய ஜனதா கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக இருந்து வருபவர் வினோஜ் பி செல்வம். அரசியலின் மீது உள்ள ஆர்வத்தால் தனது 21 வயதில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி தலைவர், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் என பல பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும் சென்னையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்திர விடுதி, ரோகிணி விடுதி போன்றவற்றில் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
மேலும் மத்திய சென்னை பகுதியில் பல நலத்திட்டங்களை செய்வது, மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற பல பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மத்திய சென்னை பகுதியை சார்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதியை மேம்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் கோரிக்கையை வைத்துள்ளார். சென்னையிலிருந்து ஜோத்பூருக்கு ரயில் வசதிகளை மேம்படுத்துவது, சென்னையில் யானை கவுனி பாலத்தை கட்டி முடிப்பது போன்ற பல கோரிக்கைகளையும் வைத்துள்ளார்.
இதுபோக பாஜக சார்பில் 25 ஆயிரம் பேருக்கு சிவாலயங்களில் அன்னதானம் வழங்குவது, மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, என பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்துள்ளார். குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவை எதிர்த்துப் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று சில நிமிடங்கள் சேகர் பாபுவை திணறடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மத்திய சென்னை பகுதியில் ஹீரோவாக வலம் வரும் வினோஜ் பி செல்வம் இந்த தேர்தலில் கண்டிப்பாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.