Election 2024 | "தமிழக மீனவர்கள் தொடர்பாக மோடி மௌனம் காப்பது ஏன்.?"... தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி .!



why-modi-silent-when-tn-fishermen-attacked-by-srilanka

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை அகற்ற திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இந்தியா கூட்டணி சார்பாக தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

politicsதூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரான கனிமொழியை கருணாநிதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். அப்போது பேசிய அவர் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மோடி மௌனகுருவாக மாறிவிடுகிறார் என தெரிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பலமுறை தெரிவித்த போதும் அவர் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருக்கிறார் என குற்றம் சாட்டினார்.

politicsதமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கு எதிரான கண்டனத்தை தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதன் அர்த்தம் என்ன.? என பிரதமர் மோடிக்கு எதிராக தனது கேள்வியை முன் வைத்துள்ளார். கடந்த 10 வருட ஆட்சியில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்ற தவறி விட்டதாகவும் தெரிவித்தார். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியால்  இந்தியா மீள முடியாத பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.