மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Lok Sabha 2024 | "அமலாக்கத் துறையை வைத்து வசூல் வேட்டை நடத்தும் பாஜக" - அதிமுக எம்பி சி.வி சண்முகம் அதிரடி பிரச்சாரம்.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்தப் பொது தேர்தலில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 2019 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்ற அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
இந்நிலையில் விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான சிவி சண்முகம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக தாக்கிப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சிவி சண்முகம் அதிமுக போட்ட பிச்சையில் தான் பாஜகவிற்கு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கிறார்கள் என தாக்கி பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சி மதங்களை வைத்து மக்களிடம் பிரிவினை அரசியல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த 10 வருடங்களில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கிறது. ஆனால் அது அவர்களால் ஒருபோதும் முடியாது எனவும் கூறினார். பாரதிய ஜனதா கட்சி அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தெரிவித்தார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.