மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாம்பத்திய விஷயங்களில் பெண்கள் கவலைப்படும் விஷயங்கள் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
ஒருபுறம் உடலுறவு விஷயங்களில் பெண்களுக்கு வெறுப்புகள் அதிகரிக்கிறது எனினும், மற்றொருபுறம் கணவரின் திருப்தியின்மை கொண்ட செயல்களால் மற்றொரு துணையை தேடும் நிலைக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இவை அவரவருக்கு கிடைத்த துணைகளை பொறுத்து, எண்ணங்களை பொறுத்து வேறுபாடும்.
பொதுவாக பெண்ணுக்கும்-ஆணுக்கும் தாம்பத்திய விஷயங்களில் ஆர்வம் என்பது இல்லாமல் இருக்காது. பெண்கள் இவ்விஷயத்தில் ஆண்களை போல எளிதில் அதனை காண்பித்துக்கொள்ளமாட்டார்கள். மனதிற்குள் ஆசைகள் இருக்கும். அவர்களை தாம்பத்தியத்தை விரும்பும் நாட்களில் காலையில் தொடங்கி இரவு வரை மகிழ்ச்சியோடு சின்னசின்ன விஷயங்களையும் கவனித்து கையாள வேண்டும்.
அதனைத்தொடர்ந்து, இரவில் ரொமான்ஸ் தொடங்கலாம். சில பெண்கள் தான் அழகாக இல்லை என விரக்தியில் கணவருடன் நெருங்க தயங்குவது உண்டு. இப்படியான பெண்களின் மீது துணைகள் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதனால் பெண்ணுக்கு உணர்வுகள் தூண்டப்படும். அதனைத்தொடர்ந்து நேர்த்தியாக, பொறுமையாக பெண்ணை கையாண்டு இருவரும் உச்சகட்டத்தை நோக்கி பயணிக்கலாம்.
ஆண்களில் சிலர் எப்போதும் தாம்பத்தியம் குறித்த எண்ணத்திலேயே இருப்பார்கள். இவை பெண்ணுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். ஆகையால், மனிதநேய பொறுப்புடன் கவனமாக செயல்பட வேண்டும். மனக்காயம் என்பது தாம்பத்திய விஷயத்தில் ஏற்பட்டுவிட்டால் சிக்கல்தான். ஆகையால் கவனமாக இருக்கவேண்டும். முரட்டுத்தனம், வற்புறுத்தல் என்பது அறவே கூடாது. அன்போடு அணுகி இருவரும் கட்டிலில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சில பெண்கள் தாம்பத்தியத்தின் போது பிறப்புறுப்பு வறட்சி மற்றும் இறுக்கம் போன்றவை காரணமாக வலிகளை சந்திப்பது உண்டு. இது சிலநேரம் பெண்களுக்கு தாம்பத்தியத்தின் மீது வெறுப்பை தரும். இதனால் முரட்டுத்தனமான உடல்கூடல் இல்லாமல், வலிகளை மறந்து இருகத்தழுவும் அளவு முன்விளையாட்டுகளை மேற்கொண்டு, வலிகளை குறைக்கும் பொருட்களை தேவை என்றால் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.