திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா: முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதல்..!!
16 வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இன்று தொடங்கும் 16 வது சீசனில், முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு பங்கேற்கின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.,
'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும்.
லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 16 வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி மே 28 ஆம் தேதி நடைபெறும்.