#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விறுவிறுப்பாக சென்னை மைதானத்தில் தொடங்கும் 2021 ஐபிஎல் தொடர்.! ஆனால் கடும் சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.!
கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தவருடம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. முதல் போட்டி ஏப்ரல் 9ம் தேதி இரவு 7:30 மணிக்கு சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன.
மொத்தம் உள்ள 56 லீக் போட்டிகளில் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களுரில் தலா 10 போட்டிகள் நடைபெறும், டெல்லி மற்றும் அகமாதாபாத்தில் தலா 8 போட்டிகள் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி சென்னை அணியும்-டெல்லி அணியும் மும்பை மைதானத்தில் மோதுகின்றன. 2021 ஐபிஎல் லீக்கில் சென்னை அணி ஒரு ஆட்டம் கூட சென்னை மைதானத்தில் ஆடவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.