மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவனித்தீர்களா அதை? ஆட்டத்தின் இறுதியில் அம்பானி மனைவி செய்த காரியம்!
ஐபில் சீசன் 12 நேற்றுடன் முடிந்தது. சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி ஐபில் கோப்பையை கைப்பற்றியது. சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா மூன்று முறை ஐபில் கோப்பையை கைப்பற்றிய நிலையில் நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் மும்பை அணி நான்காவது முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. 150 ரன் என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் பறிபோனதால் இறுதியில் சென்னை அணி மிகவும் கடினமான சூழலுக்கு சென்றது.
ஒரு கட்டத்தில் வாட்சன் மீண்டும் அபாரமாக ஆடி சென்னை அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். மும்பை வெற்றிபெறுமா? சென்னை வெற்றிபெறுமா? என அனைவரும் கடவுளை பிராத்தனை செய்துகொண்டிருந்த நிலையில் மும்பை அணியின் உரிமையாளரும், அம்பானியின் மனைவியுமான நீத்தா அம்பானி ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்களில் குனிஞ்ச தலை நிமிராமல் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
கேமிராவில் அவரை காட்டும்போதெல்லாம் தலை குனிந்து கை கூப்பி கடவுளையே பிராத்தனை செய்திகொண்டிருந்தார் அம்பானி மனைவி. அவரின் நீண்ட நேர வேண்டுதலால்தான் என்னவோ மும்பை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.