மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்சி மாறிய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு? வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல கிரிக்கெட் வீரரான அம்பாத்தி ராயுடு ஐபிஎல் தொடர்களில் மும்பை மற்றும் சென்னை அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனிடையே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு கடந்த சீசன் உடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதனையடுத்து உடனடியாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திடீரென கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் நடிகருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர் பவன் கல்யாணின் கட்சியில் சேர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.