மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா பாதிப்பு.! டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை.?
நாடுமுழுவதும் கொரோனா கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க T20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், இந்திய சீனியர் அணி இங்கிலாந்து சென்று, கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ள 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்ற அஸ்வினுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஸ்வின் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. தற்போது ரவிசந்திரன் அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.