96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முக்கிய வீரரின் சாதனையை முறியடித்த தமிழக வீரர் அஸ்வின்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடித்தார் அஷ்வின். அஸ்வின் இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார்.
முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி முரளிதரனின் சாதனையை முந்தியுள்ளார் அஷ்வின். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 375 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் புதிய சாதனைக்கு ரசிகர்கள் அஸ்வினை பாராட்டி வருகின்றனர்.