சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
சுழலில் மிரட்டிய சாகல்! தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளின் படி, இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று மெல்பர்னில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக கேதர் ஜாதவ், சிராஜுக்கு பதிலாக விஜய் சங்கர், குல்தீப் யாதவுக்கு பதிலாக யுவேந்திர சாகல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். முதல் 10 ஓவரிலேயே பின்ச்(14) மற்றும் கேரி(5) புவனேஷ்வர் பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கவாஜா, மார்ஷ் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் அவர்களால் சாகலின் சுழலை சமாளிக்க முடியாமல் அவுட்டாகினர்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஹ்ன்ஸ்கோம்ப் மட்டும் 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் சுழலில் மிரட்டிய சாகல் 6 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் மற்றும் சமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த எளிதான இலக்கை இந்திய அணி அடைந்து தொடரை கைப்பற்ற அருமையான வாய்ப்பு உள்ளது.