மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெற்றியை நோக்கி பயணிக்கும் இந்தியா! ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங்
சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக தாமதமாக துவங்கப்பட்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது. பல்லோவ் ஆன் ஆன ஆஸ்திரேலிய அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை துவக்கி உள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து நேற்று டிக்ளேர் செய்தது. புஜாரா 193, பண்ட் 159, ஜடேஜா 81, விஹாரி 77 ரன்கள் எடுத்தனர்.
மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்தது. ஆனால் பின்னர் ஹாரிஸ் 79, மார்ஷ் 8, லாபஸ்சாக்னே 38, ஹெட் 20, கேப்டன் பெய்ன் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. ஹான்ஸ்கோம்ப் 28, கம்மின்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
நான்காவது நாள் ஆட்டமான இன்று சிட்னியில் பெய்த மழையால் தாமதமாக துவங்கப்பட்டது. இன்றைய ஆட்டமானது உணவு இடைவேளை நேரம் முடிந்ததும் பின்பே துவங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கம்மின்ஸ் 25, ஹான்ஸ்கோம்ப் 37 ரன்களிலும், லயன் றன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க் மற்றும் ஹாசில்வூட் இணைந்து 42 ரன்கள் எடுத்தனர். கடைசியில் ஹாசில்வூட் 21 ரன்னில் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும் சாமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 322 ரன்கள் பின்தங்கி பாலோ ஆன் ஆன ஆஸ்திரேலிய அணியை மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு இந்திய அணி அறிவித்துள்ளது. எனவே மீதமுள்ள நாட்களில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை வீழ்த்தம் நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3-1 என்று தொடரை கைப்பற்றும்.