மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேக்ஸ்வெல் - அலெக்ஸ் கேரி அதிரடி.. இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றியது.
அடுத்து துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தன. கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளில் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனால் நிதானமாக ஆடிய பெயர்ஸ்டோவ் சதம்(112) விளாசினார். மிடில் ஆர்டரில் பில்லிங்ஸ் 57 வோக்ஸ் 53 என கைகொடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 73 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா அணி.
ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் சதம் விளாசினர். அலெக்ஸ் 106, மேகஸ்வெல் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
49.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 305 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரை 2-1 என ஆஸ்திரேலியா வென்றது. தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதினை மேக்ஸ்வெல் பெற்றார்.