பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
டி20 உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்.!
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் 2-வில் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் 49 பந்துகளில் 70 ரங்களும், முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 79 ரங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பாபர் ஆசம் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் 3 அரை சதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையைப் அவர் பெற்றார்.
முதலாவதாக நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 68 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 51 ரன்களும் பாபர் அசாம் எடுத்திருந்தார். இதற்க்கு முன்னதாக டி20 வரலாற்றில் விரைவாக 1,000 ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் பதிவு செய்திருந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் 1,000 ரன்களை குவித்த முதல் ஜோடி என்ற பெருமையை முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் பெற்றுள்ளனர்.