#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த பாபர் அசாம்.. கோலி மற்றும் பின்ச்சுடன் முதலிடத்தில் பாபர் அசாம்!
சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 1500 ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாபர் அசாம் 56 ரன்கள் எடுத்தார். இன்றைய போட்டியில் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ரன்களை கடந்தார். இது பாபர் அசாமின் 39 ஆவது போட்டியாகும்.
இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 1500 ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்சுடன் இணைந்துள்ளார் பாபர் அசாம்.
தற்போதைய நிலவரப்படி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 2794, ரோகித் சர்மா 2773, கப்டில் 2536 ரன்கள் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர்.