ஆசிய கோப்பை 2023: இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவிற்கு ஏற்பட்ட சிக்கல்!!



bcci-issues-update-on-shreyas-iyer-injury

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் குறித்து பி.சி.சி.புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.

லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நேற்று முன்தினம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுநாளான நேற்று முடிவடைந்தது.

சூப்பர்-4 சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் தலா 1 வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்த நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் குறித்து பி.சி.சி.ஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக இருக்கிறார், ஆனால் முதுகு பிடிப்பில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், அவர் பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவால் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார், மேலும் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் சூப்பர்-4 போட்டிக்கு அணியுடன் இன்று மைதானத்திற்கு செல்லவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.