கொரோனா பரவல் காரணமில்லையா.? இந்தியாவில் ஐ.பி.எல். தொடரை நடத்தாதது ஏன்.? பி.சி.சி.ஐ செயலாளர் கொடுத்த விளக்கம்.!



bcci talk about ipl

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தவருடம் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால், அனைத்து வீரர்களின் நலன் கருதி ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தி வரும் பிசிசிஐ ஐபிஎல் தொடர் இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்று அறிவித்திருந்தது. இந்த ஆண்டுக்கான தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி உள்பட 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்த நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

ipl

இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கமளித்துள்ளார். அதில், செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம் என ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.