தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தோல்வியை கண்டு நாங்க பயப்படுவோமா? - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடி பதில்.! டெஸ்டில் சொதப்பி தோல்வியடைந்த இந்தியா.!
5 டெஸ்ட் தொடர்கள் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் முதல் ஆட்டம் ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் ஜனவரி 25 முதல் தொடங்கி இன்று நிறைவுபெற்றது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்து அவுட்டாக, இந்தியா 426 ரன்கள் குவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவிந்ததால், எஞ்சிய 231 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இந்தியா அடித்து ஆடுவது போல தோன்றினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்திய அணியின் இன்றைய சொதப்பல் ஆட்டம், முதல் வெற்றி இந்திய மண்ணில் இந்தியாவின் கைகளை நழுவிப்போனது. ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா, "எங்கு தவறு நடந்தது என கணிப்பது கடினம். அணியாக நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். பேட்டிங் சரியாக செய்யவில்லை. சிராஜ் மற்றும் பும்ரா இணைந்து போட்டியை ஐந்தாவது நாளுக்கு எடுத்து செல்வார்கள் என விரும்பினேன்" என கூறினார்.
வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) பேசுகையில், "நான் கேப்டனாக விளையாடியபோது பல சிறப்பான தருணங்கள் அமைந்து இருக்கின்றன. ஆனால், இதுவே மிகசிறந்த வெற்றி ஆகும். தோல்விகளை கண்டு நான் அஞ்சுவது இல்லை" என கூறினார்.