பென் ஸ்டோக்சின் தந்தைக்கு சொந்த ஊரில் ஏற்பட்ட அவமானம்!கலக்கத்தில் பெற்றோர்



Ben stokes parents in Newzland

கடந்த வாரம் பரபரப்பாக நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில் பெயரும் புகழும் சம்பாதித்துள்ள பென் ஸ்டோக்சின் குடும்பத்தாருக்கு தாய் நாடான நியூசிலாந்தில் சில எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. காரணம் நியூசிலாந்து அணி கோப்பையை இழக்க காரணமான பென் ஸ்டோக்ஸ் பிறந்ததும் நியூசிலாந்தில் தான். 

wc2019

இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் பிறந்தது நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் தான். அவரது குடும்பத்தினர் இன்னும் நியூசிலாந்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். அவரது தந்தை ஹெட் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து ரக்பி லீக் அணியில் ஆடியுள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய தங்களது மகனைப்பற்றி அவர்கள் பேசுகையில், “அந்த ஆட்டத்தைப் பார்க்கும் பொழுது எங்கள் கண்கள் கலங்கிவிட்டன. எங்கள் மகன் சிறப்பாக ஆடுகிறான் என சந்தோஷப்படுவதா அல்லது தனது தாய் நாட்டின் எதிராக விளையாடுகிறார் என வருத்தப்படுவதா என்ற குழப்பத்தில் இருந்து வந்தோம்.

wc2019

நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியுமா கோப்பையை வெல்ல முடியாமல் போனதை நினைத்து இங்கு பலரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதற்கு காரணம் எங்களது மகன் தான் என்பதால் எங்கள் மீது வெறுப்புகளை காட்டத் துவங்கி விட்டனர். 'நியூசிலாந்தின் மிகவும் வெறுக்கத்தக்க தந்தை' என எனக்கு பட்டம் சூட்டி உள்ளனர்" என வேதனையுடன் கூறியுள்ளார்.