மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த விராட் கோலியின் இடத்தை பிடித்த பென் ஸ்டோக்ஸ்!
கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் அல்மனாக் என்ற புத்தகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறந்த வீரராக இடம்பிடித்த விராட் கோலியின் இடத்தை பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு பெற்றுள்ளார்.
விஸ்டன் அல்மனாக் என்ற புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் வெளியிடப்படும். இந்த புத்தகத்தில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற பெயர் இடம்பெறும்.
2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளியான இந்த புத்தகத்தில் தலைசிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றது. இந்த ஆண்டு வெளியான புத்தகத்தில் விராட் கோலியின் இடத்தை இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றினார்.
2019 உலக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்லவும், ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான சதமடித்தும் பென் ஸ்டோக்ஸ் தனது திறமையை நிரூபித்தார். இதுவே பென் ஸ்டோக்ஸின் இந்த வெற்றிக்கு காரணம்.
Wisden Honours
— Wisden Almanack (@WisdenAlmanack) April 8, 2020
The Leading Cricketers in the World#wisdenalmanack2020#wisdenhonours@benstokes38 @EllysePerry pic.twitter.com/UaqF1Th8zQ