பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சென்னை அணி வீரர் விலகல்! தொடர் சிக்கலில் சிக்கி தவிக்கும் சென்னை அணி!
நடப்பு ஐபில் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் பிராவோ விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதுவரை ஒரு சீசனில் கூட முதல் சுற்றில் இருந்து வெளியேறாத சென்னை அணி இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியுடனான போட்டியின்போது சென்னை அணி வீரர் பிராவோ காயம் காரணமாக போட்டியின் பாதியிலையே மைதானத்தில் இருந்து வெளியேறினார். காயம் அதிகமாக இருப்பதால் பிராவோ குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஓய்வெடுக்கவேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, பிராவோ இனி வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், காயம் காரணமாக அவர் அவதிப்படுவதால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்புகிறார் என கூறியுள்ளார்.
ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் சென்னை அணிக்கு முக்கியமான வீரர்கள் எனவும், இருவரையும் சென்னை அணி மிகவும் மிஸ் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் அணியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விளைகியநிலையில் தற்போது பிராவோ காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.