"ஒரு சீனியர் பவுலராக என்னால் இதைத்தான் செய்ய முடியும்" அர்ஷ்தீப், ஆவேஷ் குறித்து புவனேஸ்வர் விளக்கம்..!



Buvaneshwar about arshdeep and avesh

பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்தப்படியான வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் இந்திய அணியில் பல புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Buvaneshwar

அந்த வரிசையில் தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானிற்கு டி20 போட்டியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அர்ஷ்தீப் சிங் முதல் இரண்டு போட்டிகளிலுமே எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகவே பந்துவீசினார்.

Buvaneshwar

ஆனால் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்ட ஆவேஷ் கானின் பந்துவீச்சு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கடைசி ஓவரை ரோகித் சர்மா ஆவேஷ் கானை வீச வைத்தது பல விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில் 3 ஆவது டி20 போட்டி துவங்குவதற்கு முன்பு பேசிய‌ புவனேஸ்வர் குமார், 'அர்ஷ்தீப் மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார். ஆவேஷ் கானும் பரவாயில்லை. நான் தொடர்ந்து அவர்களிடம் பேசிக்கொண்டும் அவர்களுக்கு உதவியாகவும் தான் இருக்கிறேன். ஒரு சீனியர் பவுலராக என்னால் இதைத்தான் செய்ய முடியும்' என கூறியுள்ளார்.