திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேப்டன் தோணினா இதான் சார்.. இளம் வீரருக்கு தன் பைக்கில் லிப்ட் கொடுத்த வீடியோ வைரல்.!
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் விளையாடி வருகின்றார். இந்த நிலையில் ஒரு இளம் வீரருக்கு தோனி தன்னுடைய பைக்கில் லிப்ட் கொடுத்த வீடியோ தான் இன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தோனி பயிற்சி முடிந்த பின்னர் தன்னுடன் பயிற்சியில் ஈடுபட்ட இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு தனது பைக்கில் லிப்ட் கொடுத்து இருக்கிறார்.
Nothing to see here. Just #MSDhoni living his best semi retired life and a very lucky young cricketer who got a lift on his #YAMAHA RD350. 🏍️ #Jharkhand #Dhoni #msd #mahi #ranchi pic.twitter.com/EipYkBptsU
— Jharkhand Jatra (@JharkhandJatraa) September 15, 2023
ஹெல்மெட் அணிந்தபடி தோனி பைக்கை இயக்கிய நிலையில் சாலையில் பயணம் செய்துள்ளார். அப்போது, அவருடன் பயணித்த இளம் வீரர் தன்னுடைய செல்போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தான் இன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.