மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களை அசிங்கப்படுத்திய சென்னை அணி! காரணம் இதுதான்!
ஐபில் சீசன் 12 நேற்றுடன் முடிவடைந்தது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே கைதராபாத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்கார்கள் பிளசிஸ், வாட்சன் அதிரடியாக ஆடினர். பிளசிஸ் 26 ரன்களில் ஆகி அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து அவுட் ஆகினர். துவக்க வீரராக களமிறங்கி இறுதிவரை நிலைத்து ஆடி வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை குவித்து ரன் அவுட்டனார்.
.
Unprecedented scenes from Hyderabad as @mipaltan became #VIVOIPL champs for the 4⃣th time!
— IndianPremierLeague (@IPL) 12 May 2019
Lasith Malinga showing his true class in the last over 😎#MIvCSK pic.twitter.com/ZzVK0KHx5O
முதல் ஓவரில் ரன்களை வாரி வழங்கிய மலிங்கா கடைசி ஒரு பதில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, சாமர்த்தியமாக வீசி ஷர்டுல் தாகூர் விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 4 முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணியுடன் ஆடிய 4 ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வி அடைந்ததால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.