#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விட்டதை மீண்டும் பிடித்த சென்னை அணி! உற்சாகத்தில் சென்னை அணி ரசிகர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. கைதராபாத் அணி சார்பாக மனிஷ் பாண்டே 83 ஓட்டமும், வார்னர் 57 ஓட்டமும் எடுத்தனர்.
176 என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. இதற்கு முன்னர் நீண்ண்ட நாட்களாக புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற தொடர் தோல்வியாலும், டெல்லி அணியின் வெற்றியாலும் இரண்டாம் இடத்திற்கு சென்றது.
இந்நிலையில் கைதராபாத் அணியுடனான வெற்றி மீண்டும் சென்னை அணியை புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற செய்துள்ளது. புள்ளி பட்டியலில் இருக்கும் முதல் நான்கு அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணைத்து அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.