மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோல்வியையே சந்திக்காத பெங்களூருக்கு முதல் அடி கொடுத்த சென்னை..! சிஎஸ்கே-யின் செல்லப்பிள்ளை தான் முக்கிய காரணம்.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று (இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கிலும் ரவீந்திர ஜடேஜா அசத்தி பெங்களூரு அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை போல்ட் ஆக்கினார். மேலும் ஒரு ரன் அவுட்டையும் செய்தார். இதனால் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்த பெங்களூரு அணி, இன்று முதல் தோல்வியை சிஎஸ்கே-யிடம் சந்தித்துள்ளது.