#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொதப்பிய வாட்சன், ஆறுதல் தந்த ரெய்னா! சுமாரான நிலையில் சென்னை அணி!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள ஐபில் 2019 இன்னும் 10 ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகிறது. சென்னையின் சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளஸி இருவரும் ஆரம்பம் முதல் சொதப்பலாக விளையாடினர். முதல் மூன்று ஓவரில் சென்னை அணி மூன்று ரன் மட்டுமே எடுத்தது.
9 பந்துகள் விளையாடிய அதிரடி வீரர் வாட்சன் ரன் எதுவம் எடுக்காமல் ஆட்டம் இழந்தது சென்னை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ரெய்னா சற்று நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 37 பந்துகளில் 59 ரன் எடுத்தார்.
வாட்சன் சொதப்பினாலும் ரெய்னா மற்றும் டுப்ளஸி இருவரின் ஆட்டம் சென்னை அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தியது. ரெய்னா 59 , டுப்ளஸி 39 ரன் என்ற நிலையில் ஆட்டம் இழந்தனர். தற்போது தோணி, ஜடேஜா இருவரும் விளையாடி வருகின்றனர். 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 116 ரன் எடுத்துள்ளது.