மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு சூரியன்..!! ஒரு நிலவு..!! ஒரேயொரு தோனி..!! கொல்கத்தாவை அதிரவைத்த மஞ்சள் படை..!!
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33 வது லீக் போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்ப்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் 35, டெவன் கான்வே 56, ஷிவம் துபே 50, அஜின்கியா ரஹானே 71 ஆகியோரது அதிரடியால் 235 ரன்கள் குவித்து அசத்தியது. முன்னதாக டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்த கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா சென்னை அணியின் அதிரடியை கட்டுப்படுத்த வழி தெரியாமல் முழி பிதுங்கினார்.
இதனை தொடர்ந்து, 236 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் ஜேஸன் ராய் 61, ரின்கு சிங் 53 குவித்ததுடன் ஆறுதல் அடைந்தது. சென்னை கேப்டன் தோனியின் வியூகத்தில் சிக்கிய மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 5 வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த போட்டிக்கு வந்திருந்த ரசிகர் ஒருவர் வைத்திருந்த ஒரு சன், ஒரு மூன், ஒரே 7 (தோனியின் ஜெர்ஸி எண்) என்ற பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.