சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
மயங்க அகர்வாலை கழட்டி விட்டு ஷிகர் தவானை கேப்டனாக்கிய பஞ்சாப் அணி.! கொதித்தெழுந்த கிறிஸ் கெயில்.!
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது.
அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது கொச்சியில் இன்று நடைபெற உள்ளது. இந்தப்பட்டியலில் கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட மயங்க அகர்வால் பெயரும் இடம் பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அந்த அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது குறித்து அந்த அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் ஏலத்தில் மயங்க் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார். அவ்வாறு அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்.
மயங்க அகர்வால் ஒரு அதிரடி ஆட்டக்காரர். அவர் பஞ்சாப் அணிக்காக செய்த தியாகத்திற்கு பின்னும் அந்த அணியால் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் மற்ற அணிகள் அதிக தொகைக்கு அவரை வாங்குவார்கள் என நினைக்கிறேன். அவர் ஒரு அற்புதமான வீரர். நீங்கள் அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டு வந்தால் உங்களால் ஒரு நிரந்தர ஆடும் லெவனை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.